ஈரானுக்கு எச்சரிக்கையுடன் இஸ்ரேலின் திடீர் பல்டி
தகுந்த நேரத்தில் ஈரான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவோம். தகுந்த நேரத்தில் ஈரான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கருத்தின் அடிப்படையில் இஸ்ரேல் இந்த மோதலுக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது எனக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
தற்காலிக முற்றுப்புள்ளி
“மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது. அமைதியை நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் நிலைப்பாடு தாக்குதலுக்கான தற்காலிக முற்றுப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (ஞாயிறு) காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது.
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன.
இந்த தாக்குதல் 3ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என பலர் அச்சம் எழுந்த நிலையில், இஸ்ரேலின் நிலைப்பாடு சில கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளன.
அமெரிக்காவின் நிலைப்பாடு
அதேபோல், அமெரிக்காவில் 2024 நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு இன்னும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
அமெரிக்க மத்திய வங்கிகளின் கடன் கொள்கைகளில் மாற்றம் இல்லாதது உலகம் முழுவதும் சந்தை நிலவரங்களை பாதித்து வருகிறது.
இத்தகையச் சூழலில் அமெரிக்கா இன்னொரு போருக்கு பின்னணியாக இருக்க விரும்பவில்லை. அதனால், கூட இஸ்ரேல் இதிலிருந்து பின்வாங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|