300 ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
ஈரான் அனுப்பிய 99% சதவீதமான ஏவுகணைகள் இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
"குறைந்த எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மட்டுமே நாட்டின் எல்லையை அடைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 300 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஈரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் ஈராக் (iraq) மற்றும் யேமனில் (yemen) இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
? Watch: Israeli defense systems intercept Iranian missiles over the Temple Mount pic.twitter.com/oEebzijEGI
— Israel ישראל ?? (@Israel) April 13, 2024
இஸ்ரேல் மீதாக தாக்குதலுக்கு பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளதுடன் பிரித்தானியாவும் தனது போர் விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நிலைநிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பளித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுறுக்கமான பதிவொன்றை x தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"நாங்கள் இடைமறித்தோம். தடுத்தோம். நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் டமாஸ்கஸில் ஈரானிய இராணுவத் தளபதி மற்றும் துணை அதிகாரிகளைக் கொன்றமைக்கு பதிலடியாக தற்போது ஈரான் தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam