காசாவில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக காசா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
எகிப்து குடியேற்றவாசிகளை ரஃபா எல்லைக்குள் நுழைய அனுமதிக்காமையே பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
இராஜதந்திர முயற்சி
எனினும், இலங்கையர்களை எகிப்திற்குள் அனுமதிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் சிக்கியுள்ள இலங்கை மக்களின் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
செஞ்சிலுவை சங்கம் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவை வழங்கி வருவதாகவும், ஆனால் அவர்கள் உணவு மற்றும் தண்ணீரைக் கேட்கவில்லை விரைவில் எகிப்துக்கு அனுப்ப முடியுமோ என்றே கேட்கின்றனர் என பாலஸ்தீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை



