இஸ்ரேலின் அணு நிலைகளைக் குறிவைத்து 'ரொக்கட்' வீசும் ஹமாஸ்!
இஸ்ரேலை நோக்கிய ‘ஹமாஸ்’ அமைப்பினர் ஏவிய சில றொக்கட்டுகள், இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஐயன் டோம்’ வான் பாதுகாப்பு பொறிமுறைகளைக் கடந்து வந்து இஸ்ரேலின் பல இடங்களிலும் விழுந்து வெடித்துள்ளன.
இது இஸ்ரேலின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக- இஸ்ரேலின் மிக முக்கியமான பிரதான அணு நிலை என்று நம்பப்படுகின்ற ‘டிமோனா’ என்ற நகரத்தை நோக்கி ஹமாஸ் அமைப்பு 15 இற்கும் அதிகமான றொக்கட்டுக்களை ஏவியிருந்தது.
அந்த றோக்கட்டுக்கள் இஸ்ரேலின் 'நெகேவ்' பாலைவனத்தில் விழுந்து வெடித்தாகவும் கூறப்படுகின்றது.
ஹமாசின் தாக்குதல் பலத்தை அழித்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள இன்றைய நிலை பற்றியும், இஸ்ரேலில் நடைபெறக்கூடும் என்று அஞ்சப்படுகின்ற முக்கியமான இரண்டு விடயங்கள் பற்றியும் பார்க்கின்து இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: