போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ள இஸ்ரேல் - ஹமாஸ்
சுமார் 15 மாதங்களாக இடம்பெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்ரேலும் ஹமாஸும் (Israel - Hamas) போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் கடந்த ஒக்டோபர் 7, 2023ஆம் ஆண்டு தெற்கு இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்றதுடன் 251 பேரை பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்துச் சென்றது.
இந்தத் தாக்குதல் காசா மீது இஸ்ரேலின் பாரிய தாக்குதலைத் தூண்டியது. இதன்போது 46,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தொடர்ந்த போர்...
அதேவேளை, பணயக்கைதிகளில் 94 பேர் இன்னும் ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றும் இஸ்ரேல் கூறுகிறது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், "மத்திய கிழக்கில் உள்ள பணயக்கைதிகள் குறித்து எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது" என்றும் "அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்" என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த போர் நிறுத்த ஒப்பந்தமானது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமையும் என்று நம்பப்படுகிறது.
மேலும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளின் பரிமாற்றமும் இந்த ஒப்பந்தத்தினால் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வேதேச வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
சுமார், ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்று, பல உயிர் உடமை சேதங்களை ஏற்படுத்தி வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவை எட்டும் என உலகலாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுகின்றது.