காசா மீதான இஸ்ரேலின் கடும் தாக்குதல் குறித்து இலங்கையின் நிலைப்பாடு
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் மேற்கொள்வதால் ஏற்படும் மோசமான நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், காசாவில் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்குமாறு சகல தரப்பிடமும் கோருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைதி நிலைமை
அத்தோடு, விரைவில் இந்தப் பகுதியில் நிலையான அமைதி நிலை நாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை அதிகரித்துள்ளதுடன் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரையில் போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பணயக்கைதிகளின் விடுவிப்பில் ஹமாஸ் கடைப்பிடித்த தாமத நிலைப்பாடே, இந்த மாத தொடக்கத்தில் தற்காலிக முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தமைக்கு காரணம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.எனினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் காசா விடயம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடன் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 5 மணி நேரம் முன்

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
