ஈரானின் முக்கிய பலத்தை நொடிகளில் சாய்த்த இஸ்ரேல்..! அடுத்த கோர தாக்குதல்
ஈரானின் தெற்கு புஷேர் மாகாணத்தில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலை ஈரானின் எண்ணெய் அமைச்சகம்(Iran’s Ministry of Oil) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
அதே மாகாணத்தில் உள்ள மற்றொரு எரிவாயு நிறுவனமான ஃபஜ்ர் ஜாம் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனமும்(Fajr Jam Gas Refining Company) இதன்போது குறிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் பலத்தை நிரூபிக்கும் படியான இராணுவத் தளம் ஒன்றின் காணொளியை ஈரான் வெளியிட்டிருந்தது.
கொல்லப்பட்ட தளபதிகள்
குறித்த காணொளியில் ஈரானின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி மற்றும் ஐஆர்ஜிசி விண்வெளிப் படைத் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே ஆகியோர் இராணுவத் தளத்தை சுற்றி பார்வையிடுவது போலான காட்சிகள் உள்ளன.
Iran posted this video to show the world how powerful they are.
— Israel Defense Forces (@IDF) June 14, 2025
We showed the world what happens when you mistake propaganda for strength.
The Iranian Chief of Staff and Commander of the IRGC featured in this Iranian propaganda video have been eliminated and the site has been… pic.twitter.com/LyavG6W2Jk
இதனையடுத்து, குறித்த இராணுவத் தளம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட தளபதிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) 'X' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரான் இந்த காணொளியை தனது பலத்தை உலகிற்கு காட்ட வெளியிட்டது. பிரசாரத்தை, வலிமை என்று தவறாகப் புரிந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை உலகிற்கு காட்டினோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
