இஸ்ரேலின் தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை: ஸ்பெயின் பெண் அமைச்சர் ஆதங்கம்
காஸாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சர் அயோன் பெலாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பரிதாபமாக பலி
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10,000 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சரும், தீவிர இடதுசாரி Podemos கட்சியின் தலைவருமான அயோன் பெலரா இஸ்ரேலை கண்டித்துள்ளதுடன், உலகத்தலைவர்களின் வெளிப்படையான இரட்டை நிலைப்பாட்டையும் சாடியுள்ளார்.
அயோன் பெலாரா கண்டனம்
அவர் ஊடக சந்திப்பொன்றில், 'இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக உலகத்தலைவர்கள் செயல்படத் தவறிவிட்டனர்.காஸாவில் பாலஸ்தீனியர்களை கொன்றது திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும்.
எனவே சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும்.பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை இஸ்ரேலிய அரசு நிறுத்த வேண்டும்.
உலகம் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, மற்ற மோதல்களில் மனித உரிமைகள் பற்றி ஏன் நாம் பாடம் கொடுக்க வேண்டும்? ஐரோப்பிய ஒன்றியம் பற்றி எனக்கு நன்றாக தெரிந்ததைப் பற்றி நான் பேசுகிறேன். ஐரோப்பிய ஆணையம் காட்டும் பாசாங்குத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என தெரிவித்துள்ளார்.
மேலும், காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினும், பிற நாடுகளும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
காஸாவில் இருந்து தனது குடிமக்கள் சிலரை வெளியேற்ற முயற்சிக்கும் மேற்கத்திய நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this,

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
