நஸ்ரல்லாவை இலக்குவைத்து பெய்ரூட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஏவுகணைகள்
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இலக்குவைத்தே நேற்று பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தினை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் நஸ்ரல்லா கொல்லப்பட்டாரா என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் வலுவிடமான டகியாவில் பல கட்டிடங்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 91 பேர் காயமடைந்தனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றி முடித்ததை தொடர்ந்து லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே 700 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 300 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் போர் விமானங்கள்
தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5 நாட்களில் லெபனானில் இருந்து சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கிட்டத்தட்ட 1000 கிலோ எடை கொண்ட பதுங்கு குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், பெய்ரூட் பகுதியில் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் பிரிவு கமாண்டர் முகமது உசைன் ஸ்ரூர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோ பைடன் உத்தரவு
இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை விளிப்புடன் இருக்கச் செய்யுமாறு அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை விளிப்பு நிலையைல் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பைடன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |