பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் விமான சேவை ஆரம்பம்: ஈரானிய 300 ஏவுகணை செலுத்திகள் அழிக்கப்பட்டதாம்..
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் காரணமாக பல நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டு, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் மீண்டும் விமான சேவைகளும் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நாட்களில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தொடர்பான முடிவுகளை எடுக்கும் குழுவை இஸ்ரேல் தாக்கியதன் பின்னர், தாக்குதல்களின் தீவிரம் இன்று (05.03.2026) ஓரளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, வெளிநாடுகளில் இருக்கும் இஸ்ரேலியர்களை தமது சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், அதனைப் பற்றிய புகைப்படங்களுடன் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 300இற்கும் மேற்பட்ட ஏவுகணை செலுத்திகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக ஈரான் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் வழமைபோல் வீதிகளில் நடமாடத் தொடங்கியுள்ளதுடன், பேருந்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதற்ற நிலை நீடித்து, இஸ்ரேல் அழிவை எதிர்கொள்கிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த தகவல்கள் நிலைமையை வேறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.
இது தொடர்பில் “உண்மை தரிசனம்” நிகழ்ச்சி விரிவாக ஆராய்கிறது.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam