இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேல்(Israel) தனது வான் வெளி குண்டுவீச்சு மற்றும் தரைவழி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்த நிலையில், காசா முழுவதும் வான்வழித் தாக்குதல்களில் மாத்திரம் குறைந்தது 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசாவின் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்கள் பல வீடுகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த தகவல்கள் தொடர்பில், தாம் ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா மீதான வான்வழித் தாக்குதல்களை, இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் தொடங்கியுள்ளது.
அத்துடன்,புதன்கிழமை தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கியது, இதன் காரணமாக, கடந்த ஜனவரி முதல் நடைமுறையில் இருந்து வந்த பலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடனான போர்நிறுத்தம் தகர்ந்துப் போயுள்ளது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முதல் நாள் வான்வழித் தாக்குதல்களில் 400ற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இது போரின் மிகவும் கொடிய நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் குறைந்தது 510 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் அரைவாசி பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று காசா பிரதேச சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் கட்ட போர் நிறுத்தம்
காசாவில் தனது நிர்வாகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற ஹமாஸுக்கு ஒரு அடியாக, இந்த வார தாக்குதல்கள் அமைந்துள்ளன.
காசா அரசாங்கத்தின் உண்மையான தலைவர், பாதுகாப்பு சேவைகளின் தலைவர், அவரது உதவியாளர் மற்றும் ஹமாஸ் நடத்தும் நீதி அமைச்சகத்தின் துணைத் தலைவர் உட்பட அதன் சில உயர் தரப்பினர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
கடுமையாக பலவீனமடைந்தாலும் இன்னும் நிலைத்து நிற்கும் ஹமாஸ், இதுவரை பதிலடி கொடுக்கவில்லை.
பணயக்கைதிகளின் விடுவிப்பில் ஹமாஸ் கடைப்பிடித்த தாமத நிலைப்பாடே, இந்த மாத தொடக்கத்தில் தற்காலிக முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தமைக்கு காரணம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.எனினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ Cineulagam
