இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்தும் வர்த்தகம் - காவிந்த ஜெயவர்தன
இந்தியர்களை இலங்கைக்குள் தனிமைப்படுத்தி, வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் ஒன்றை சிலர் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்துளளார்.
இதற்காக இணையத்தளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல வேண்டுமாயின் வேறு ஒரு நாட்டில் தன்மை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம்.
இதனால், இலங்கையில் உள்ள சில வர்த்தகர்கள், இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் முக்கியஸ்தர் இணைந்து இந்த வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், பாதிக்கப்படுவது இலங்கை மக்களே எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.