நாட்டின் மேலும் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
நாட்டில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் துனுகலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபுகொட கிராம சேவகர் பிரிவின் செபஸ்தியன் வீதி முதல் தெபடிஸ் வீதி வரை, பிட்டிபன லெல்லம (வடக்கு பிட்டிபன) கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குனகொலபெலஸ்ஸ காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட ரொட்டே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் கோடஹேன கிராம சேவகர் பிரிவு, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவு, இம்புல்கொட கிராம சேவகர் பிரிவு, மற்றும் கட்டுதம்பே கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்த்தின் சூரியவெவ நகர கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பக்மீதெனியா கிராம சேவகர் பிரிவில் ரன்ஹெலகம பகுதி, சேறுபிட்டிய கிராம சேவகர் பிரிவில் சேறுபிட்டிய துணை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தின் சிறிகேத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
