இலங்கையில் மேலும் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது!
நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கோவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலை, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை ஆறு மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 433 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 45,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.







ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
