உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் பிரதேசங்கள்
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காத்தான்குடி காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
காத்தான்குடி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
