மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவில், மின் பாவனையாளர் ஒன்றியத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி நாடு தழுவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது. இலங்கை மின்சாரபையின் பணியாளர்கள் நாட்டின் அரசியல் சாசனத்தினை மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மின் தடை
இலங்கை மின் பாவனையாளர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்சீவ தம்மிக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெலவத்த மின் பரிமாற்று நிலையத்தில் மூன்று மின் பொறியியலாளர்கள் கடமையாற்றி வருவதாகவும், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் ஒருவர் மின் பொறியியலாளர் கூட கடமையில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை
திட்டமிட்ட அடிப்படையில் மின் தடையின் போது பணியாளர்கள் கடமையில் ஈடுபடவில்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திட்டமிட்ட அடிப்படையில் கடமைகளை உதாசீனம் செய்வது குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் தண்டைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீ.சீ.ரீ.வீ காணொளிகள், பணியாளர் பதிவேடுகள் உள்ளிட்டன ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam