குறி வைக்கப்படும் தமிழர்களின் தீவுகள்: அம்பலப்படுத்திய யாழ். பேராசிரியர்
இலங்கை தீவைச் சூழவுள்ள சுமார் 115 தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (02.04.2023) திருநெல்வேலி திண்ணை விடுதியில் இடம்பெற்ற 13ஆவது திருத்தத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்குத் தெரிவிக்கையில், மகாவாலி அதிகார சபை பயலுள்ள ஒரு அதிகார சபையாக எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதேபோன்று தீவுகளை ஒன்றிணைத்து வலுவுள்ள அதிகார சபை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆளுநருக்கும் அதிகாரம் கிடையாது
யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, கச்சத்தீவு ஆகிய பல தீவுகள் குறித்த அதிகார சபையின் கீழ் நிர்வகிக்கப்படும். 18 வருடங்களாகச் செயல்படுத்தப்படாமல் இருந்த வடக்கு மாகாண சபை செயற்படுத்தப்பட்டதன் பின்னரும் வழங்கப்பட்ட மாகாண சபையை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
மாகாண சபை கட்டமைப்பை இனப் பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பு. உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் எனப் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலையாவது நடத்துங்கள் எனப் போராட்டங்கள் எழவும் இல்லை அரசியல்வாதிகள் கேட்கவும் இல்லை.
தற்போது தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டு வரும் திட்டம் மகாவலி அதிகார சபையிலும் பார்க்க வலுவான திட்டமாகவே அமையும். தீவுகளுக்கான அதிகார சபை உருவாக்கப்பட்டால் மகாவலியைப் போன்று வலுவுள்ள அதிகார சபையாக உருவாக்கம் பெறுவதோடு மாகாண சபை நடைமுறையில் இருந்தாலும் ஆளுநருக்கும் அதிகாரம் கிடையாது அதேபோன்று மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் யாவருக்கும் அதிகாரம் கிடையாது.
பிராந்திய அபிவிருத்தி
ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை முறை நடைமுறையில் இருந்தபோது 70 ஆயிரம் குடியேற்றங்கள் இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து கந்தளாயிலும் இடம் பெற்றது.
ஆகவே தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தி தம் பக்கம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்
பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வட மாகாண
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேவிபியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்
இராமலிங்கம் சந்திரசேகரன் உட்படப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
