கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்
கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்களின் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வை வழங்குமாறு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு கழிவு நீர் தேங்கி நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கிடையில் இடையூறு
குறிப்பாக மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி, வீதிகள் முழுவதும் நீர் தேங்கி மக்கள் நடமாட்டத்துக்கும் சிரமத்தை உண்டாக்குகின்றது.குறிப்பாக இப்பிரச்சினை B2 மற்றும் B3 மாடிகளில் மிகுந்த தீவிரமாக காணப்படுகின்றது.
இந்த பிரச்சினை புதியதல்ல சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இங்கு இதுபோன்ற நிலை ஏற்படுவதும், மக்கள் தங்களது சொந்த செலவில் தற்காலிக தீர்வுகளை மேற்கொள்வதுமாக நிலைமை நீடித்து வருகிறது.
இதனால் அடிக்கடி குடும்பங்களுக்கிடையில் இடையூறுகளும் உருவாகின்றன. மக்கள் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்த நிரந்தர தீர்வும் எடுக்கப்படாதது வருத்தத்திற்குரியது.
எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த நீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |