ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற 25 பேர் யார்..! சபையில் கிளம்பிய சர்ச்சை - செய்திகளின் தொகுப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற 25 பேர் நாட்டுக்குள் உள்ளார்கள் என ஜனாதிபதிக்கு நெருக்கமானவரான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இது சாதாரணமானதொரு கருத்தல்ல, யார் அந்த 25 பேர் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (23.082023) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் மீதான விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது விசேட கேள்வியை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐ.எஸ்.ஐ.எஸ்.குண்டுத்தாக்குதல்தாரிகள் நாட்டில் உள்ளார்கள் என ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்.
நாட்டை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் திட்டமா இது என வினவியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,




