அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு கதீஜா என்று அழைக்கப்படும் அப்துல்லா மக்கிமுஸ்லிஹ் அல்-ரிஃபாய், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலை அமெரிக்கா மற்றும் ஈராக் உளவுத்துறை இணைந்து நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே ஆபத்தான பயங்கரவாத நபர்களின் பட்டியலில் ஒருவராக அபு கதீஜா கருதப்படுவதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
ஈராக்கின் அல் கான் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை அமெரிக்காவும் ஈராக்கும் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்தத் தாக்குதலில் மற்றொரு சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடக பதிவொன்றில் சம்பந்தப்பட்ட படைகளைப் பாராட்டி,
"ஈராக்கில் தப்பி ஓடிய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் இன்று கொல்லப்பட்டார். எங்கள் துணிச்சலான போராளிகள் அவரை இடைவிடாமல் பின்தொடர்ந்தனர்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு
ISIS இன் சர்வதேச நடவடிக்கைகள், நிதி மற்றும் தளவாடங்களுக்கு அபு கதீஜா தலைமை அதிகாரியாக காணப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் ISIS இன் உலகளாவிய செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் முயற்சிகளில் ஒரு முக்கிய நபராக கருதப்பட்டார்.
அவர் "ஈராக் மற்றும் உலகெங்கிலும் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவர்" என்று அழைக்கப்பட்டார்.
பிராந்திய இழப்பு
குறிப்பிடத்தக்க பிராந்திய இழப்புகள் இருந்தபோதிலும், ஈராக் மற்றும் சிரியாவில் ISIS தொடர்ந்து தீவிரமாக தனது நகர்வை முன்னெடுத்திருந்தது.
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 153 ISIS தலைமையிலான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து குறித்த அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு எச்சரித்தது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவரான ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா, ISIS வலையமைப்புகளை அகற்றுவதற்கும் மீதமுள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இது தொடர்பில் ஈராக் மற்றும் அமெரிக்க இராணவம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அபு கதீஜா கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |