இஷாரா செவ்வந்தி தொடர்பில் பத்மே குழுவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்போதே, இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்புக்காவல் உத்தரவு
அத்துடன், இதுவரை நடைபெற்ற விசாரணையில் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டது தொடர்பாக பல உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



