இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் - வவுனியா பிரதேச சபையில் தீர்மானம்
சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் த.யோகராஜா தலைமையில் இன்று (20.07) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர் ராஜினால் சிறுமி இசாலினியின் மரணம் தொடர்பில் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை ஒன்று வேண்டும். குற்றவாளிகள் இனங்காணப்பட்டால் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பிரேரணையில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதனை சபை அமர்வில் கலந்து கொண்ட 28 உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டு ஏகமனமாக சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
