லங்காசிறியின் ஊடக அனுசரணையில் ''இசை எனும் Pain Killer'' - இசை ரசிகர்களின் செவிகளுக்கான விருந்து
லங்காசிறி ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையில், Getwins Events பெருமையுடன் நடத்தும் "இசை எனும் Pain Killer" பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ் திரையுலகின் தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னிமேனன், ஶ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், சைந்தவி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்கள் மனம் வென்ற பிரபல பாடல்களைப்பாடி கலக்கவுள்ளனர்.
இம்பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு பிரதான ஊடக அனுசரணை வழங்கும் லங்காசிறி ஊடக வலையமைப்பினூடாக தமிழ் இசை ரசிகர்கள் சுமார் 6500ற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டினை முன்பதிவு செய்துகொள்வதற்காக ஆர்வத்துடன் Bookmyshow என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Getwins Events Entertainment குழுவினர் தமது முதலாவது நிகழ்ச்சியாக "இசை எனும் Pain Killer" இசைநிகழ்ச்சியை Lankasri ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையோடு இன்று பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது.
இதேபோன்று, Lankasri ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையுடன் இணைந்து அண்மைகாலமாக பல பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்திய Aaraa Entertainment (Hariharan Live in Colombo/ Vanakkm Jaffna), Fivestar Events (Mega Musical Night, சித்திரை சிரிப்பு, முத்து சிற்பியின் இசை மாலை) D-Media (Karthik Live in CMB), Tamil Isai Festival போன்ற பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததையிட்டு லங்காசிறி ஊடக வலையமைப்பு பெருமை கொள்கிறது.
இனிவரும் நாட்களிலும் கொழும்பு மற்றும் இலங்கையின் பலபகுதிகளிலும் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளுக்கு லங்காசிறி ஊடக வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்கி நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களையும் இலட்சக்கணக்காண தமிழ் இசை ரசிகர்களையும் மகிழ்விக்க தயாராக இருப்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றது.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
