முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படுகிறதா...! வெளியான தகவல்
பெட்ரோல் விலை திருத்தமானது, முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைப்பதற்கு போதுமானதல்ல என்று தேசிய கூட்டு முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (01.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இச்சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
மேலும், லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது எனச் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை மாற்றம்
ஒரு முச்சக்கர வாகனம் லீற்றருக்கு 25 கிலோமீற்றர் தூரம் ஓடுகிறது. தற்போதைய விலை குறைப்பினால் ஒரு கிலோ மீற்றருக்கான எரிபொருள் செலவு 28 சதங்களால் மட்டுமே குறைந்துள்ளது.
எனவே, இந்த கட்டண திருத்தம் போதுமானதல்ல. பெட்ரோல் விலை மாற்றத்தைப் பயன்படுத்தி தற்போது கட்டண திருத்தம் செய்ய முடியாது.
அத்துடன், வாழ்க்கைச் செலவு குறைவதோடு, முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் மற்றும் ஏனைய எண்ணெய் விலையும் குறைவடைந்தால் மாத்திரமே கட்டண குறைப்பு தொடர்பில் கருத்திற்கொள்ள முடியும்.

கட்டணத்தைக் குறைக்க முடியாது
வாராந்திர ஒதுக்கீட்டின் அடிப்படையில் எட்டு லீற்றர் பெட்ரோல் வழங்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களுக்காக பல்வேறு சட்டவிரோத வழிகளில் போதுமான எரிபொருளைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் பெறுவதில் நாங்கள் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். எனவே தற்போது முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க முடியாது எனவும் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri