ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றதா?
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த உண்மைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றதா என இலங்கை கத்தோலிக்கச் சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று 32 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உண்மைகள் அம்பலப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றே பல்வேறு விடயங்கள் குறித்த உண்மைகள் அம்பலமாவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் சில மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில் அதற்கு யார் பொறுப்பு என இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று 32 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து ஐக்கயி நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



