இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - ஊழியர்களின் வேலைகள் பறிபோகுமா..! தொழில் அமைச்சின் தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தொழில் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வரை வேலைவாய்ப்பு இழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்
இருப்பினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அமைச்சு ஆயத்தமாகி வருகின்றது. எரிபொருள் நெருக்கடியினால் தொழில் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தேசிய தொழில் ஆலோசனைச் சபையில் ஏற்கனவே விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தற்போதுவரை வேலை இழப்புகள் பதிவாகவில்லை என்றாலும், முதலாளிகள் மற்றும் ஊழியர் தரப்புடன் இணைந்து எதிர்கால நிலைமைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்றுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இலங்கையிலும் எரிபொருள் தொடர்பான சவால்களைத் தோற்றுவித்துள்ளன.

வெளியான மதிப்பீடு
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு சில மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
சுமார் 374,000 தொழிலாளர்கள் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாதத்திற்கு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 22 மணி நேரம் முன்
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam