இடிக்கப்பட போகிறதா ஈபிள் கோபுரம்... வெளியான உண்மை
ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி (02.10.2025) ஈபிள் கோபுரம் மூடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த போலிச் செய்திகள் சமூக ஊடகங்களில் அதிகமாக பரவின.
ஈபிள் கோபுரம் 2026ஆம் ஆண்டுடன் இடிக்கப்பட இருப்பதாகவும் அதனால் கோபுரத்தை இறுதியாக பார்க்க நினைப்பவர்கள் பார்த்துக்கொள்ளுமாறும் செய்திகள் வெளிவந்தன.
உண்மைக்கு புறம்பான செய்திகள்
நீண்ட காலமாக பிரபலமாக இருந்த ஈபிள் கோபுரத்தை காண தற்போது யாரும் வருவதில்லை என்பதே இதற்கான காரணமாக கூறப்பட்டிருந்தது.
எனினும், கோபுரத்தை நிர்வகித்துவரும் 'SETE' அமைப்போ பரிஸ் நகரத்தின் கலாசார அமைப்புக்களோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இதிலிருந்து, ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவது குறித்து வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரியவருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
