இந்தியாவில் கைதான 4 ஐ.எஸ் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர பேச்சுவார்த்தை
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெற்கு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் இந்திய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களிடம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அவற்றை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் அவர்களிடம் இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர்கள் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தற்போதைய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan