இலங்கைக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர அரசியல்வாதி
தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” என்று பலகையை கைகளில் ஏந்துவார்கள்.
தம்மிக்கவின் புதிய சபதம்
எனவே, எனது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தியேனும் எனது திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தனது திட்டங்கள் அனைத்தையும் செயற்படுத்தவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்காகவே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கு விரைவில் தீர்வு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பிரபல கோடீஸ்வரரான தம்மிக்க பெரெரா தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டுக்கு அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் தம்மிக்கவுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பு பதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
