இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தவறிப்போன 2.5 மில்லியன் டொலர்

Sri Lanka Economic Crisis India Tourism
By Vethu Aug 06, 2022 03:16 PM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக  இந்தியா விளங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வருவதை இந்திய சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இதன் பின்னணியில் இந்த புதிய சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கும் சுற்றலா பயணிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தவறிப்போன 2.5 மில்லியன் டொலர் | Is Sri Lanka Good For Tourists

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான எதிர்மறையான தகவல்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டம் காரணமாக இலங்கை வருவதனை பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இந்தியர்களும் இலங்கை வருவதனை நிறுத்தியுள்ளனர்.

எப்போதுமே இலங்கைக்கு அதிகம் வரும் சுற்றுலா பயணிகளாக இந்தியர்களே காணப்பட்டனர். எனினும் கடந்த மாதம் இந்தியர்கள் இரண்டாம் இடத்திற்கு சென்று பிரித்தானியர்கள் முதலிடத்திற்கு வந்துள்ளனர்.

ஆசிய கிரிக்கெட் கிண்ணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தவறிப்போன 2.5 மில்லியன் டொலர் | Is Sri Lanka Good For Tourists

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹோட்டல் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு டொலர்கள் விரைவாக கிடைக்க வேண்டுமாயின், விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டிய சிறந்த துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதாக  ஹோட்டல் ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்நாட்டில் நடத்தும் வாய்ப்பையும் இலங்கை இழந்தது. இதனால் இலங்கைக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் இலங்கையின் நிலைமை குறித்த எதிர்மறையான அறிக்கைகள் இலங்கை ஆசியக் கிண்ணத் தொடரை நடத்துவதில் தோல்வியடைய காரணமாக அமைந்ததாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணப் போட்டி இலங்கையில் நடத்தப்பட்டால், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறும் வாய்ப்பும் இருந்தது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தரும் மாதமாக ஒகஸ்ட் மாதம் கருதப்படுகிறது.

எனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US