உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றைய எதிர்க்கட்சி உடந்தையா? கேள்வியெழுப்பும் எஸ்.வியாழேந்திரன் (Video)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்டது இன்றைய எதிர்க்கட்சியின் ஆட்சிக்காலத்திலாகும். தெரிந்திருந்தும் அதனைத் தடுக்காமல் விட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்களும் உடந்தையா என்ற கேள்வியெழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S. Viyalanderan) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் தலைப்பகுதியை மட்டக்களப்பு பொதுமயானத்தில்
புதைத்ததற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பு
நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் இராஜாங்க அமைச்சர்
எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் நடைபெற்றபோது குறித்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கினை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசாங்கம் வந்ததன் பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

