அமெரிக்காவிற்கு ஐ.எஸ் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை? உளவுத்துறை அதிகாரி தகவல்
அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாகாணத்திலுள்ள மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை வெடி வைத்துத் தகர்க்க ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த திட்டம் தொடர்பில் உளவுத்துறை தகவலளித்துள்ளதை தொடர்ந்து மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாடு முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பு தனி நபர் தாக்குதல்களை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரியான ஜோன் கோஹன்(John Cohen) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் செவ்வாய் கிழமை விர்ஜினியாவில் ஆளுநர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், குறித்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri