தென்னிலங்கை மக்களால் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவமானம்
இலங்கையில் ஊழல் ஆட்சி செய்தமைக்காக ராஜபக்ஷர்களை விரட்டும் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில், ஆட்சியாளர்களும் அகற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நாட்டின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயலகம் மற்றும் மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டுள்ளன. மறுபுறத்தில் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகையும் மக்களின் வசம் உள்ளன.
மக்களின் போராட்டம்

சர்வதேச நாடுகளின் தலைவர்கள், ராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்திக்கும் மற்றும் நாட்டின் முக்கிய தீர்மானங்களை கலந்தாலோசிக்கும் இடங்களாக இவை உள்ளன. எனினும் நாட்டின் முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ள மக்கள், அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமான இல்லம் என்ற எண்ணத்தில் பல்வேறு அநியாங்களை செய்து வருகின்றனர்.
அங்குள்ள மிகவும் விலை உயர்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் பொருட்களை களவாடி வருகின்றனர்.
இது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகையாகும். இது ராஜபக்ஷர்களின் குடும்ப சொத்து இல்லை என்பதை மக்கள் மறந்து விட்டார்கள். தற்போது சேதப்படுத்தும் பொருட்களையும் உடைக்கும் உடமைகளையும் மீண்டும் சரி செய்யும் போதும் மக்களின் வரிப்பணமே செலவு செய்யப்படவுள்ளது. இதுவொரு பொதுச் சொத்தமாகும்.
ஜனாதிபதி மாளிகையில் மக்கள்

ஒன்றுபட்ட மக்கள் எழுச்சி காரணமாக ராஜபக்ஷர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் தான். எனினும் அதன் பின்னரான மக்களின் செயற்பாடு மிகவும் அநாகரியமாகவே காணப்படுகிறது.
ஒரு பாடசாலையில் அதிபர் ஒருவரின் ஆசனத்தில் எந்த மாணவனும் அமர எண்ணுவதில்லை. அதேபோன்று நாட்டு ஜனாதிபதி ஒருவர் அமரும் ஆசனத்தை முறையற்ற வகையில் மக்கள் பயன்படுத்துகின்றனர். அதனை ஒரு களியாட்ட இல்லமாக மாற்றியுள்ளனர்.
வல்லரசு நாடுகள் உட்பட சிறு நாடுகளின் அரச தலைவர்கள் அங்கு பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர். ஒரு நாட்டின் இதயமாக கூட அதனை கருத முடியும்.அவ்வாறான நிலையில் பொது சொத்துக்களுக்கு எவ்வாறு சேதம் விளைவிக்க முடியும்.
பொறுப்பற்ற செயற்பாடுகள்

பாமர மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய பல பொலிஸார், உயர் அதிகாரிகள், மத குருமார் உட்பட பலரும் வேடிக்கை பார்க்கின்றனர். இதனை தட்டிக்கேட்க அங்கு யாரும் இல்லை என்பதும் துரதிஷ்டவமே.
பல ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் இது கோட்டபாயவின் சொகுசு வாழ்க்கைக்கான இல்லம் என்றே மக்கள் மத்தியில் பிழையாக கொண்டு செல்கின்றனர். இது இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கான மாளிக்கை என்பது முன்னிலைப்படுத்த மறந்து விடுகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். மக்கள் செய்யும் அநாகரியமான செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக காட்சிப்படுத்தப்படுகின்றன.
இலங்கைக்கு அபகீர்த்தி

இது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், சுற்றுலாத்துறை மற்றும் நாட்டுக்கு கிடைக்கும் சர்வதேச உதவிகளுக்கு கூட தடையாக இருக்கலாம்.
நாட்டு மக்கள் பொறுப்புடன் உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இது. ஜனாதிபதி மாளிகையிலோ, செயலகத்திலோ, அலரி மாளிகையிலோ எந்தவொரு பொருட்களை உடைக்காதீர்கள், திருடாதீர்கள், நாட்டின் பண்புகளை உதாசீனம் செய்யாதீர்கள்.
ஏனெனில் அவை அனைத்தும் உங்களின் பணம். இது கோட்டபாயவின் மாளிகை அல்ல. இலங்கையின் சொத்து.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam