கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய தற்போதைக்கு அனுமதியில்லை?
கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அந்த இடங்களில் காணப்படும் நீரின் அளவு பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்யும் இடங்கள் தொடர்பில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலங்களை கட்டாயமாக அடக்கம் செய்ய வேண்டுமாயின் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படும் வரையில் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்திருக்க முடியும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
