யாழ்ப்பாணம் முடக்கப்படுமா? அரசாங்க அதிபர் கூறியுள்ள விடயம்

Jaffna Corona Virus Press Meet Covid - 19
By Mayuri Apr 27, 2021 08:20 AM GMT
Report

தற்போதைய நிலையில் யாழ். மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தொடர்ச்சியான எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் நேற்றைய தினம் 13 பேருக்கு தொட்டு இனங்காணப்பட்டுள்ளது. அந்த வகையிலே ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு 1,201 பேருக்கு யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

708 நபர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இன்றுவரை 19 கோவிட் மரணங்கள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. நேற்றுவரை 1253 குடும்பங்களைச் சேர்ந்த 3416 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம்.

ஜனவரி மாதத்திற்கு பின்னர் சுமார் ஆயிரத்தி 523 சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

அதனடிப்படையில் 15.23 மில்லியன் ரூபா இன்று வரை இந்த வருடம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் 491 குடும்பங்களுக்கான நிதிக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கும் அந்த நிதி வழங்கப்படும்.

இந்த நிலையில் தற்போது அரசினுடைய புதிய சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் அரச தனியார் துறை நிறுவனங்கள் அனைவரும் புதிய நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.

வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ்ப்பாண மாவட்டத்திலே வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையினை பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அலட்சியத்தை விடுத்து சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்யாது செயற்படவேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயங்களில் 50 பேருக்கு மேற்பட்ட ஒன்றுகூடல்களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விடயங்களை ஆலய பரிபாலனசபை மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறையினை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது. பொது நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

எனவே மக்கள் ஒன்றுகூடல்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளியினை பேணுதல் மிக மிக அவசியமானது.

பிரதேச செயலாளர் மட்டத்திலும் கிராம மட்டங்களில் கோவிட் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றோம். இந்த விழிப்புணர்வு செயற்பாடானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தினை முடக்குவதற்கான இந்த தீர்மானம் இல்லை.

ஆனால் அரசாங்கம் ஏனைய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் அந்த ஒரு நிலைமை யாழ். மாவட்டத்திற்கு இன்னும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படும் போது நிச்சயமாக முடக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம்.

அதற்காக தற்போதைய நிலையில் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. ஏனென்றால் கடந்த வாரம் மக்கள் சற்று பீதியடைந்த நிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

அதாவது அதிக அளவிலான பொருட்கொள்வனவில் ஈடுபட்டது அவதானிக்கப்பட்டது. பொது மக்கள் ஒன்றுகூடல் களை தவிர்த்து பாதுகாப்பாக நடந்து கொண்டால் இவ்வாறான அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US