நாட்டில் தொடர் முடக்கம் சாத்தியமா? வெளியான அறிவிப்பு
நாட்டில் பதிவாகும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் பெருந்தோட்டத் துறை அமைச்சருமான ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
கோவிட் என்பது சாதாரண நோய் அல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை பெருந்தொற்று என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளினால் கூட வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாதநிலை காணப்படுகிறது.
ஆகவே கோவிட் தொற்றை சாதாரண நோய் என ஒருபோதும் கருத முடியாது. அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்படவேண்டும்
.
கோவிட் தாக்கத்தை கருத்திற்கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan