யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரின் பொறுப்பற்ற நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரின் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் மாவட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (23.10.2025) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட குறித்த சங்கத்தின் தலைவர் யசோதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் 355 நிரந்தர பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி பெறுவதில் சிறு நிர்வாகத்தவறு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இதன்போது திட்டமிட்ட பின்னடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்
குறிப்பாக இலங்கையில் உள்ள 17 பல்கலைக்கழகங்களிலும் காணப்படும் போதனை சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களில் 1400 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவது எனும் தீர்மானம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய, அனைத்துப் பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்பட்ட கோரிக்கையின்படி காணப்படும் வெற்றிடங்களில் 67 சதவீத வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு பெரும்பாலான பல்கலைக்கழகங்களினால் அவற்றிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் 355 பதவி வெற்றிடங்களில் 07 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
அடையாள தொழிற்சங்க போராட்டம்
இதனால் பாதிக்கப்படுவது தனியே பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி எமது சமூகத்தின் இளம் தொழில் தேடுவோராகவும் இருக்கின்றது.
இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறுவது எனும் கேள்வி எமது மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் நாம் எதிர்வரும் 28ஆம் நாளன்று ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாரு பாருங்க Cineulagam
