கிளிநொச்சியில் சிறுபோக செய்கையில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் கீழான 2022 ம் ஆண்டு மற்றும் 2023 ஆண்டு சிறுபோகத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட விஸ்தீரன அளவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும், அந்த அறிக்கைகளை நளினப் படுத்தும் வகையிலும்
எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் இடம் பெறுவதற்கும் வழி வகுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறு போக பயிர்செய்கையின் போது பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
ஐந்து பேர் கொண்ட குழு
இந்நிலையில், கடந்த 2023ம் ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுபோக செய்கையின் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட அரசு அதிபர் மற்றும் உயர்நிலை அதிகாரிகளுக்கு விவசாயிகளால் எழுத்து மூலம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய சிறுமபோகச் செய்கையின் விஸ்தீரன அளவை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை இடுவதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர், கரைச்சி பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கண்டாவளை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், இரணைமடு கமக்கார அமைப்புகளின் பிரதிநிதி என ஐந்து பேர் கொண்ட குழு மாவட்ட அரச அதிபரால் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி பயிர் செய்கை முறைகேடுகள் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தி அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டதுடன் குறித்த ஆய்வு அறிக்கைகளின் மூலம் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் முறைகேடுகளுடன் தொடர்புபட்டவர்களை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகளும் துணையிருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |