ஈரானின் இலக்கு பட்டியல்! எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடி அறிவிப்பு
ஈரான் எச்சரிக்கை ஈரானின் தெற்கு அண்டை நாடுகளின் நிலங்களையோ அல்லது வசதிகளையோ எதிரிகள் ஈரானைத் தாக்கப் பயன்படுத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் உற்பத்திக்கு அவர்கள் விடை சொல்ல வேண்டியிருக்கும் என ஈரான் இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த நாட்டின் அரசுக்கு உட்பட்ட Fars News Agency வெளியிட்ட தகவலின்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) விண்வெளிப் படைப்பிரிவு தளபதி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார வாழ்வாதாரம்
முன்னதாக பாரசீக வளைகுடா நாடுகளில் சில, ஈரானின் எதிரிகளுக்கு தங்களது நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்கியதாகவும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் அந்த நாடுகளின் பொருளாதார வாழ்வாதாரம் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானின் “தாக்குதல் இலக்கு பட்டியல்” தற்போது இராணுவ தளங்களைத் தாண்டி விரிவடைந்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் உள்ள முக்கிய எண்ணெய் களங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள சில முக்கிய இடங்கள் குறிப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வளைகுடா நாடுகளில் பல, அமெரிக்கா நாட்டின் கூட்டாளிகளாக இருப்பதுடன், சில நாடுகளில் அமெரிக்க இராணுவ தளங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan