உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2024/2025 ஆண்டிற்கான வருமான வரி கட்டணங்களை அனைத்து வரி செலுத்துவோர் எதிர்வரும் 30க்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இறுதி அறிவித்தல் வழங்கியுள்ளது.
இந்த விதி தனிநபர்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், பங்குடமைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் வரி கட்டணங்களை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தில் தாமதம் அல்லது செலுத்தத் தவறினால் வட்டி மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் வட்டிகள் எந்த சூழலிலும் விலக்கு அளிக்கப்படமாட்டாது அல்லது குறைக்கப்படமாட்டாது எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam