கடந்த ஆண்டில் பெருந்தொகை வரியை வசூலிக்கத் தவறிய உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
கடந்த 2025ம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,164 பில்லியன் ரூபா வரி நிலுவை தொகையை வசூலிக்கத் தவறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்காக நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களுடைய ஆட்சி காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டது ஒரே குழுவா..! வெளியாக திடுக்கிடும் தகவல்கள்
பெருந்தொகை வரி
கடந்த ஆண்டில் முன்னைய 2024ம் ஆண்டை விட வரி வருமானம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கான காரணம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய 2,164 பில்லியன் ரூபா வரி நிலுவைத் தொகையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த வரித்தொகை 2025 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்டிருந்தால், அந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை முழுமையாகக் குறைத்திருக்க முடியும் என்றும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகின்றது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan