மீண்டும் திறக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்பரப்புகள்! விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக ஈராக், சிரியா மற்றும் பஹ்ரைனின் வான்வெளிகள் வணிக விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஈராக் விமான நிலையங்களுக்கு வரும், அங்கிருந்து புறப்படும் மற்றும் அதன் வழியே பயணிக்கும் அனைத்து பயணிகள் விமானங்களும் அனுமதிக்கப்படும் என்று ஈராக் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்
ஈராக்கும் சிரியாவும் ஏப்ரல் 8 அன்று தங்கள் வான்வெளிகளில் போக்குவரத்து மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.

ஈராக்கின் வான்வெளி பெப்ரவரி மாத இறுதி முதல் முழுமையாக மூடப்பட்டிருந்தது, அதேசமயம் சிரியா வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மட்டுமே அனுமதித்துள்ளது.
பஹ்ரைன் தனது வான்வெளி முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை
இருப்பினும், விமானப் பயணங்களுக்கு முன் விமான நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் புறப்படும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை 100 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam