சூடானுக்கு ஆயுதம் கடத்தியதாக குற்றச்சாட்டு : அமெரிக்காவில் ஈரானியப் பெண் கைது
ஈரானில் இருந்து சூடானுக்கு சட்டவிரோதமாக ட்ரோன்கள், வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவின் Green card வைத்திருக்கும் ஷமிம் மாஃபி (44) என்ற ஈரானியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுப் போரால் சிதைந்துள்ள சூடான்
ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் யூரோ (70 மில்லியன் டொலர்) மதிப்பிலான 55,000 வெடிகுண்டு பியூஸ்கள் மற்றும் மில்லியன் கணக்கான தோட்டாக்களை சூடான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விற்பனை செய்ய இவர் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் சூடான் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையே பாலமாகச் செயல்பட்ட மாஃபி, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் சுமார் 6 மில்லியன் யூரோக்களைக் கொடுப்பனவாகப் பெற்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் சிதைந்துள்ள சூடானில், இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையிலான மோதலுக்கு இத்தகைய சட்டவிரோத ஆயுத விநியோகம் மேலும் எரிபொருளாக அமைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 12 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam