ஹிஜாப் போராட்டம்: ஒரு வருடத்தில் 500 பேருக்கு தூக்கு தண்டனை
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஈரானிய அதிகாரிகள் 500 க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளனர் எனவும் இது கடந்த ஐந்து ஆண்டுகளிலும் பார்க்க அதிகபட்ச எண்ணிக்கையாகும் என நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
நோர்வேயை தளமாகக் கொண்ட மரண தண்டனைக்கு எதிரான குழுவான ஈரான் மனித உரிமைகள் (IHR), அமைப்பு நேற்று அறிக்கையொன்றின் ஊடாக இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஹிஜாப் போராட்டம்
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் இறந்த 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
சமீபத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனையை அதிக அளவில் பயன்படுத்தியதாக IHR தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
அதன்படி ஈரானின் ஹிஜாப் எதிர்ப்புக்களுக்காக இதுவரை ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
தற்போது 3 சிறுவர்கள் உட்பட 26 பேர், போராட்டம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வரை ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மரணதண்டனை
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு, குறைந்தது 333 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில், நியாயமான விசாரணை இல்லாமல் 504 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித உரிமைகள் குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனைகள் மூலம் சமூகத்தில் அச்சத்தை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்திலும், அரசின் உளவுத்துறை தோல்விகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்திலும் இந்த மரணதண்டனைகள் இருந்தன என்று மஹ்மூத் அமிரி-மொகத்தம் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
