இந்தியா புறப்பட தயாரான ஈரான் விமானத்தை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா
இந்தியாவுக்கு உதவி பொருட்கள் பெற வர இருந்த ஈரான் விமானம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் சேதம் அடைந்து இருப்பது உதவி பெறுவதை பாதிப்பதாக அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது.
உறுதிப்படுத்தாத அமெரிக்கா
ஈரானின் மஷ்ஹத் (Mashhad) விமான நிலையத்தில் நேற்று அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் வான்தாக்குதலில், Mahan Air நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் ஏப்ரல் 1ஆம் திகதி இந்தியா வர இருந்ததாகவும் ஈரான் மக்களுக்கான அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா உறுதிப்படுத்தாத நிலையில், எந்த தகவலும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri