கடுமையான பதிலடித் தாக்குதல் நடத்தப்படும்: ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் மீது மீண்டும் ஏதேனும் ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டால், அது பிராந்திய எல்லைகளைத் தாண்டி இன்னும் தீவிரமான கடுமையான பதிலடித் தாக்குதலைத் தூண்டும் என்று அந்த நாட்டு இராணுவம் எச்சரித்துள்ளது.
ஈரானிய ஆயுதப் படைகளின் மூத்த பேச்சாளரான அபோல்ஃபாஸ்ல் ஷேகர்ச்சி (Abolfazl Shekarchi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இராணுவம் எச்சரிக்கை
ஈரான் மீது புதிய தாக்குதல்கள் ஏதேனும் நடத்தப்பட்டால், அதற்கு பிராந்தியத்தையும் தாண்டி "மிகவும் கடுமையான" முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஈரானின் 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்ட அவரது அறிக்கையில், மீண்டும் ஒரு போர் மூளும் பட்சத்தில், ஈரானின் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்திய எல்லைகளைக் கடந்து பரவும் என்றும், முந்தைய சுற்றுகளை விட மிகக் கடுமையானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.