ஈரானின் தாக்குதல்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அவசர விவாதம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஈரான் வளைகுடா நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து 'அவசர விவாதம்' நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) மற்றும் ஜோர்டான் சார்பாக பஹ்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஈரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை இன்று(25.3.2026) கூடி விவாதிக்க உள்ளது.
பஹ்ரைன், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து இந்த விவாதத்தில் விரிவாக ஆராயப்படும்.
இராணுவ நடவடிக்கை
குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அப்பாவி உயிர்கள் பலியானது குறித்து சர்வதேச சமூகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, ஈரானின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் ஒரு வரைவுத் தீர்மானமும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஈரானின் இத்தகைய செயல்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக அமைந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது ஐ.நா சபை தலையிட வேண்டியதன் அவசியத்தை இந்த அவசரக் கூட்டம் உணர்த்துகிறது.

இந்த விவாதத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள், ஈரானுக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam