மத்திய கிழக்கில் உச்சத்தை எட்டும் பதற்றம்.. மோடியுடன் இணைந்து ஜனாதிபதியின் முக்கிய நடவடிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் மோடியும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோடியின் எக்ஸ் பதிவு
குறித்த உரையாடலின் போது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மத்திய கிழக்கில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து விவாதித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் , மேற்கு ஆசியாவில் மேலெழுந்துள்ள சூழ்நிலை தொடர்பாகவும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி துறை பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
— Narendra Modi (@narendramodi) March 24, 2026
அத்துடன், இந்தியா-இலங்கை இடையில் எரிசக்தி ஒத்துழைப்பை…
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்தியப் பிரதமர் மோடி, அந்தத் தொலைபேசி உரையாடலின் போது, இந்தியா - இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட முக்கிய முன்னெடுப்புகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவும் தானும் ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கிய மற்றும் நம்பகமான பங்காளிகளாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam