போர் இல்லாத இலங்கையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி: சுட்டிக்காட்டும் அரியநேத்திரன்
போர் இல்லாத இலங்கையில் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் அதிகளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்களை இன்று ஆரம்பித்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
''இந்த தேர்தலை நாங்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமாகவே நங்கள் பார்க்கின்றோம். இனப்பிரச்சினை என்ற விடயம் மேலோங்கியதன் விளைவே நாட்டில் பொருளாதார பிரச்சினைக்கு காரணமாகிறது.
இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் இணைந்த வடக்கு கிழக்குக்கான தேர்வை வழங்கியிருக்க வேண்டும்.
அதன் விளைவே நாட்டின் தற்போதைய நிலை" என்றார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,