இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் திறப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் இன்று இரவு திறந்து விடப்பட்டுள்ளன.
இரணைமடு, முத்தையன்கட்டு ஆகிய நீர்த்தேக்கங்களின் நீரேந்து பகுதிகளில் பொழியும் கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில் குறித்த இரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளையும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

முதலாம் இணைப்பு
இரணைமடு, முத்தையன்கட்டு ஆகிய நீர்த்தேக்கங்களின் நீரேந்து பகுதிகளில் பொழியும் கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
இதன் காரணமாக, குளங்களுக்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளது.
உபரி நீர் வெளியேற்றல்
இந்நிலையில், இவ்விரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளது.

எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.








உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 15 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam